மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடத்தில் செய்யப்படும் மாற்றம்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம் ஒன்றில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித எட்வர்ட் கிரீடம், 350 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் மன்னர்களில் பதவியேற்பு விழாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த கிரீடத்தில் பல்வேறு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மன்னருக்காக கிரீடத்தில் மாற்றம்
அந்த கிரீடம், ராஜ குடும்ப நகைகள் வைக்கப்படும் Tower of London என்னும் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது அங்கிருந்து அகற்றப்பட்டு, மன்னருடைய முடிசூட்டு விழாவில் அவருக்கு அணிவிப்பதற்கு வசதியாக அதில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
மன்னர் சார்லசில் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி, லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் நடைபெற உள்ளது குறிபிடத்தக்கது.