ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும் பிரித்தானிய நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்...
சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியடைந்தது.
ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும், பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.
ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும், இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது போல பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு உயரத் துவங்கியுள்ளது.
சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியடைந்தது.
கடந்த வாரம் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சற்றே உயர்ந்த பவுண்டுன் மதிப்பு, பின்னர் மீண்டும் குறைந்தது.
ஆனால், தற்போது ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், போட்டியிலிருந்து போரிஸ் ஜான்சனும் விலகிவிட, ரிஷியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ள பென்னி மோர்டான்டுக்கு இதுவரை 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரிஷி முன்னேறி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் பவுண்டுன் மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 1.11 டொலர்களாக இருந்த பவுண்டின் மதிப்பு, இன்று, திங்கட்கிழமை, 1.135 டொலர்களாக உயர்ந்துள்ளது.
பொருளாதாரவியல் அமைப்பு ஒன்றில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றும் Megan Greene என்பவர் இது குறித்துக் கூறும்போது, ரிஷி சுனக் பிரதமருக்கான போட்டியில் முன்னணி வகிப்பது, பங்குச் சந்தைகளை அமைதிப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன், பிரித்தானியாவின் நிலைமை முதலீடு செய்ய இயலாத ஒரு நிலையில் காணப்பட்டது என்று கூறும் அவர், ரிஷி பிரதமராக இருப்பதால், அவர் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் பங்குச் சந்தைகளை அமைதிப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.