அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி

UK Chesterfield
By Balamanuvelan May 25, 2021 06:30 AM GMT
Report

நடுங்கவைக்கும் குளிரில், பிரித்தானிய மருத்துவமனை ஒன்றின் முன் அட்டைப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றைக் கண்டார்கள் அந்த மருத்துவமனை ஊழியர்கள்.

Chesterfieldஇல் உள்ள அந்த மருத்துவமனையில் பணிபுரியும் Daphne, Susan மற்றும் Gill என்ற மூன்று செவிலியர்கள் அந்த குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்து கருத்தாய் கவனித்துக்கொண்டார்கள்.

இதற்கிடையில், இப்படி ஒரு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் அநாதரவாக விடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட ஒரு தம்பதியர், ஓடோடி வந்து அதை தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டார்கள்.


அவர்களது அன்பில் திக்குமுக்காடி வளர்ந்ததால் வேறு யாரையும் அதிகம் தேடவேண்டிய ஒரு சூழல் Helen Knox என்ற அந்த குழந்தைக்கு வரவில்லை என்றாலும், தற்போது 32 வயதாகும் நிலையில், தன்னுடைய இரத்த சம்பந்தமான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியுடன் DNA சோதனை மூலம் ஆராய்ந்தபோது, Helenக்கு ஒரு அக்கா இருப்பது தெரியவந்தது. இதில் சோகம் என்னவென்றால், Jess என்ற அந்த பெண்ணும், 14 மாதக் குழந்தையாக ரோட்டோரம் விடப்பட்டிருந்தார் என தெரியவந்ததுதான்.

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி | A Child Left Helpless In A Cardboard Box

சோகத்திலும் ஒரு சுகம் என்பார்கள், அதுபோல, இருவருமே கைவிடப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இருவராலும் ஒருவரது உணர்வுகளை மற்றவரால் நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது.

சமீபத்தில், கொரோனா பரிசோதனைகளுக்குப் பின், பாதுகாப்பான ஒரு மருத்துவமனையில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி | A Child Left Helpless In A Cardboard Box

இத்தனை வருடங்களாக தனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியும், இத்தனை வருடங்கள் சந்திக்காமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட, உணர்ச்சி மிகுதியால் இருவரும் கண்களில் நீர் துளிர்க்க ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ’பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்றொரு வாக்கியம் கம்பராமாயணத்தில் வரும்.

அதுபோல, அக்கா தங்கையின் கண்களிலிருந்து வரும் கண்ணீரே அவ்வளவு உணர்வுகளையும் கொட்டிவிடுகிறது. இது ஒரு நாள் நிகழ்வல்ல, இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடியது என்று நினைக்கும்போது உள்ளம் துள்ளுகிறது என்கிறார் Helen.

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி | A Child Left Helpless In A Cardboard Box

சகோதரிகளின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்ட நிலையில், பின்னர், Helenஐ கவனித்துக்கொண்ட அந்த செவிலியர்களையும் சகோதரிகள் சந்தித்துள்ளார்கள்.

இதற்கிடையில், சகோதரிகளின் தாயையும் அந்த தொலைக்காட்சி குழு கண்டுபிடித்துவிட்டது. ஆனால், அந்த பெண் தன் பிள்ளைகளை சந்திக்கும் மன நிலையில் இருப்பாரா என்பது தெரியாததால், அவரை உடனே சென்று அணுகாமல் காத்திருக்கிறது தொலைக்காட்சிக் குழு. 

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி | A Child Left Helpless In A Cardboard Box

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட குழந்தை... 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அதிர்ச்சி | A Child Left Helpless In A Cardboard Box


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US