லண்டனில் புத்தாண்டு தினத்தில் சாலையில் நடந்து சென்ற போது உயிரிழந்த நபர்! நடந்தது என்ன? வெளிவந்துள்ள தகவல்
லண்டனில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் கார் மோதி நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
Earl's Court பகுதியில் தான் இந்த சம்பவம் அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது.
Paul Campbell என்ற 49 வயது நபர் மீது கார் ஒன்று வேகமாக மோதியிருக்கிறது. பின்னர் அங்கு நிற்காமல் கார் சென்றது.
சம்பவம் குறித்து தகவலறிந்த அவசர உதவி குழுவினர் அங்கு வந்து Paul Campbell-ஐ மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 23 வயதான இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.