95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு: எது தெரியுமா?
உலக நாடுகளில் மக்கள் தொகை பிரச்சினை என்பது மிகவும் பேசும்பொருளாக இருக்கிறது.
ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் ஒரு வீட்டுக்கு இத்தனை குழந்தைதான் இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஒரு வீட்டில் கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும், அதற்கான பொருளாதார செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள்.
ஆனால், ஒரு நாட்டில் 95 வருடங்களாக குழந்தையே பிறக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.
உலக நாடுகளின் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்கள் வசிக்கும் கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் போப் ஆண்டு வரும் வாடிகன் தான் இந்த நாடு.
மேலும், உலகில் இருக்கும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ குடும்பம் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
இந்த நாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் திகதி முழு சுதந்திர உரிமை பெற்றது. அதிலிருந்து இன்று வரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.
இந்நாட்டில் குடியேற வேண்டும் என்றால் அவர் ஒரு பாதிரியாராக அல்லது துறவியாக இருக்க வேண்டும்.
அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தான் இந்நாட்டில் வசிக்க முடியும் என்பதால் இந்த வாடிகன் நாட்டில் நிரந்தர குடியுரிமை கிடையாது.
மேலும் இது மிகவும் சிறிய நாடு என்பதால் மருத்துவமனை வசதி கேட்டும் கொடுக்கப்படவில்லை.
இதன் அருகிலேயே பெரிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இருப்பதால் பெண்கள் தங்களுடைய பிரசவம் நெருங்கும் நேரத்தில் பக்கத்தில் உள்ள ரோமுக்கு சென்று தங்கி பிரசவம் பார்க்கவேண்டும்.
ரோம் நாட்டின் குடியுரிமை அந்த குழந்தைக்கு கிடைக்கும். மேலும் இந்த நாட்டில் குழந்தை கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தான் 95 வருடங்களாக இந்த நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |