பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை அவமதிக்கும் விதத்தில் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடு
சுற்றுலா வரும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஸ்பெயின் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடலில் குளிப்பவர்கள் கடலை கழிவறையாக்கக்கூடாது, அதாவது கடலில் குளிக்கும்போதே சிறுநீர் கழிக்கக்கூடாது என்றும், இந்த விதியை மீறுவோருக்கு 750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஸ்பெயின் நகரமான Galicia நகர கவுன்சில்தான் இத்தகைய அவமதிக்கும் விதத்திலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன், பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் அநாகரீகமாக உடையணிந்து தெருக்களில் நடமாடக்கூடாது என்றும் அந்நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதன் பொருள் எனவென்றால், நீச்சல் உடையுடன் கடலில் குளிப்பவர்கள் கடற்கரையிலிருந்து வெளியேறும்போது முழுமையாக உடையணிந்துதான் நகருக்குள் செல்லவேண்டும் என்றும், பெண்கள் பிகினியுடனும் ஆண்கள் சட்டை அணியாமல் திறந்த மார்புடனும் நடமாடக்கூடாது என்றும், அப்படி முறையான உடையில்லாமல் நடமாடினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் Galicia நகர கவுன்சில் அறிவித்துள்ளது.