சுவிற்சர்லாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல் வெளியிட்டு விழா!

Switzerland
By Independent Writer Nov 02, 2022 12:06 PM GMT
Report

சுவிற்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் கணிதக் கற்கை நெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரன் அவர்களின் தலைமையில்,கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல்கள்,பாடல்கள் என்பவற்றின் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கலாநிதி கல்லாறு சதீஷ் உரை நிகழ்த்தும்போது; புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடாத் தமிழ்ச் சமூகம் திகழ்வதாகவும்,ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆதாரசக்தியாகத் விளங்குகிறது”என்று கூறினார்.

தொடர்ந்து அவரது உரையில்;

கனடாவில் சுமார் 5 இலட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து ஒரு பலம்மிக்க ஒரு சமூகமாக வாழ்கிறார்கள்,மால்ரா எனும் நாட்டின் மொத்தச் சனத்தொகையே 5 இலட்சங்கள்தான்,அவர்களுக்கு என்று ஒரு தனி அரசு,அரச தலைவர்,மந்திரிகள்,விமானம் என்று அழகிய கட்டமைப்பு உள்ளது,அதே சனத்தொகை கொண்ட கனடியத் தமிழர்களும் இன்று கனடாதேசத்திலே காத்திரமான சக்தி கொண்டவர்களாகப் பரிமளிக்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல் வெளியிட்டு விழா! | A Critically Acclaimed Book Release Ceremony

கனடியப் பாராளுமன்றத்திற்கு ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் திறந்த கதவு ,இன்று ஹரி ஆனந்தசங்கரி அவர்களால் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

ஒன்ராரியோ மாநிலங்களவையில் லோகன் கணபதி அவர்கள் சிறப்பாகக் கடமையாற்றுகிறார்.

 தமிழ்வளர்ச்சித்துறையில் கனடா எழுத்தாளர் இணையம் கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

    அதன் தலைவர்களாக வீணை மைந்தன்,கவிஞர் கந்தவனம்,லோகேந்திரலிங்கம்,குரு அரவிந்தன் ஆகியோர் செயற்பட்டார்கள்,இன்று கனடாத் தமிழ் இணையத்தின் தலைவராகத் திகழ்பவர் இன்றைய நூல்களின் அறிமுக விழாவின் நாயகர் அகணி சுரேஷ் அவர்கள்தான்”என்றதும் மக்கள் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

பன்னிரெண்டு நூல்களை எழுதி,எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி,பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியில்பட்டாதாரியாகவும்,பிரித்தானியாவில் கண ணித்துறையில் முதுமாணியாகவும் பட்டம் பெற்று விரிவுரையாளராக விளங்கும் அகணி சுரேஷ் அவர்களை மிகவும் தகுதியும்,பெறுமதியும் கொண்ட மனிதர் என்று பாராட்டிய கலாநிதி கல்லாறு சதீஷ் ,சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பாக “நிறைதமிழ்” என்று பட்டம் வழங்கிக் கெளரவித்தார்.

சுவிற்சர்லாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல் வெளியிட்டு விழா! | A Critically Acclaimed Book Release Ceremony

  சுவிஸ் கணிதக் கற்கைநெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரன் தலைமையுரையைத் தொடர்ந்து,அகணி சுரேஷின் நூல்களுக்கான அறிமுக உரைகள் இடம்பெற்றன.

கதைச்சாரல் எனும் சிறுகதை நூலுக்கான அறிமுக உரையை எழுத்தாளர் துரைராசா சுரேந்திரனும்,கட்டுரைச் சாரல் எனும் நூலுக்கான அறிமுக உரையை கெளரி பூரணலாஜன்பாபுவும்,இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு எனும் நாவலுக்கான அறிமுக உரையினைக் நாவலாசிரியர் குடத்தனை உதயனும்,வெகுளாமை எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை சிறப்பு விருந்தினர் சேத்திரபாலனும்,இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள் எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை எழுத்தாளர் வடிவேலு அருள் நந்தனும் ,அன்புடமை எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை எழுத்தாளர் கமலினி கதிரும் மிகச் சிறப்பாக வழங்கினர்.

  மேலும் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் அதிபர் முருகவேள் ,அகணி சுரேஷின் மொழிசார் ஆற்றல்களைப் பாராட்டியதுடன் பொன்னாடை போற்றிக் கெளரவித்தார் மற்றும் ரதி கமலநாதன்,விமலா ஆகியோரும் வாழ்த்துரை வழங்க மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற விழா இனிதே நிறைவடைந்தது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US