சுவிட்சர்லாந்தில் யானைகளையே கொல்லும் பயங்கர வைரஸ்... தடுக்கத் திணறும் மருத்துவ நிபுணர்கள்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் மூன்று யானைகள் வைரஸ் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளன.
அந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்...
Elephant endotheliotropic herpesvirus (EEHV) என்னும் அந்த வைரஸ், ஜூன் மாத இறுதியில் Umesh என்னும் இரண்டு வயது ஆண் யானையை பலிவாங்கிவிட்டது. சில நாட்களுக்குப் பிறகு Umeshஇன் அக்காவான எட்டு வயதான Omysha என்னும் பெண் யானை அதே வைரஸ் தொற்றுக்கு பலியாகிவிட்டது.
கடந்த சனிக்கிழமை, Ruwani என்னும் ஐந்து வயது யானை EEHV வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளது. மின்னல் வேகத்தில் பரவும் அந்த வைரஸ் தொற்று காரணமாக, உள்ளுறுப்புக்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, உள்ளுறுப்புக்கள் செயலிழந்து, இந்த மூன்று யானைகளும் பலியாகியுள்ளன.
இந்த வைரஸ் எப்படி பரவுகிறது எதனால் பரவுகிறது என்பது தெரியவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏற்கனவே யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சில நாட்களுக்குள் மூன்று யானைகள் உயிரிழந்துவிட்ட விடயம் இயற்கை ஆர்வலர்களையும், வனத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Fabrice COFFRINI/AFP