பிரான்சில் அலுவலகத்துக்கு எதிராக ஒரு வித்தியாசமான வழக்கு: ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம்
பிரான்சில், அலுவலகம் ஒன்றில் பார்ட்டி போன்ற விடயங்களில் பங்கேற்க விரும்பாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அந்த ஊழியருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வார இறுதி அலுவலக பார்ட்டிகள்
பொதுவாகவே பல அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் பார்ட்டிகள், ஃபேன்சி ட்ரெஸ் போட்டிகள் முதலானவை நடத்தப்படுவதுண்டு.
அவற்றில் தவறாமல் பங்கேற்கவேண்டும் என ஊழியர்கள் வற்புறுத்தப்படுவதும் உண்டு.
அவ்வகையில், பிரான்சிலுள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவந்த ஒருவர், அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர் நிறுவனக் கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்று கூறி, அவரை பணிநீக்கம் செய்துள்ளது அந்த நிறுவனம். அவர் போர் ஆசாமி (boring), சரியாக எதையும் கவனிப்பதில்லை என்றெல்லாம் அவர் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு தெரிவிக்க தனக்கு உரிமை உள்ளது என்று கூறி, தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த ஊழியர்.
ஆச்சரியம் என்னவென்றால், boringஆக இருக்க அந்த ஊழியருக்கு உரிமை உள்ளது என்று கூறி, அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்!