பிரான்சில் ஒரு வித்தியாசமான எரிவாயு நிலையம்: ஒரு சுவாரஸ்ய செய்தி
தென்மேற்கு பிரான்சில் பிரெஞ்சு விவசாயி ஒருவர் ஒரு பால் பண்ணை வைத்திருக்கிறார். அது ஒரு தானியங்கி பண்ணை.
எல்லாம் தானியங்கி மயம்
Dordogne என்னும் இடத்தில் வாழும் Bertrand Guerin (59) என்னும் அந்த விவசாயி, மாடுகள் வைத்திருக்கிறார். அவரது மாடுகள் தானாக நடந்து பால் கறக்கும் ஒரு இயந்திரத்திடம் வருகின்றன.
பால் கறந்து முடிந்ததும், சுழலும் பிரஷ் ஒன்று மிருதுவாக மாடுகளை தடவி விடுகின்றது. மாடு போடும் சாணமோ, அந்த இடத்தின் அடியில் சென்று, சாணம், சிறுநீர், கொஞ்சம் வைக்கோல் எல்லாமாகச் சேர்ந்து இரண்டு பெரிய தொட்டிகளை அடைகின்றன.
இந்தக் கலவையுடன் பாக்டீரியா சேர்க்கப்பட, அது அதை நொதிக்கச் செய்து கார்பன் டை ஆக்சைடாகவும், மீத்தேனாகவும் மாற்றுகிறது.
இந்த மீத்தேனின் பெரும்பாகம், மின்சார தயாரிப்புக்காக கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு வித்தியாசமான எரிவாயு நிலையம்
அத்துடன், அந்த மீத்தேனில் ஒரு சிறுபாகம் மட்டும் சுத்திகரிக்கப்பட்டு, வாகனங்களுக்கான இயற்கை திரவ எரிவாயுவாக பயன்படுத்தப்படுகிறது.
அதே பண்ணையின் ஒரு பகுதியில் பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிலையத்தில், இந்த மீத்தேனை வாகனத்தில் நிரப்பிக் கொள்ளலாம். அங்குதான் தனது பண்ணை வேலைகளுக்கான ட்ராக்டருக்கு எரிபொருள் நிரப்புகிறார் Bertrand.
கடைசியாக, எரிபொருட்கள் பிரிக்கப்பட்ட மீதமுள்ள கழிவு, அவரது பண்ணைக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆக, மாடுகள் வெளியிடும் மீத்தேனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதுடன், ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் உரமும் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு நல்ல பாதுகாப்பையும் உற்திசெய்கிறது Bertrandஇன் பண்ணை.