மன்னர் சார்லஸ் தனது காருக்கு எரிபொருளாக பயன்படுத்தும் வித்தியாசமான பொருள்: வாசனையுடன் வெளிவரும் புகை
மன்னர் சார்லஸ் தனது கார் ஒன்றிற்கு வித்தியாசமான எரிபொருள் ஒன்றைப் பயன்படுத்துகிறார்.
ஆம், அவரது ஆஸ்டன் மார்ட்டின் கார் பெட்ரோலிலோ அல்லது டீசலிலோ இயங்கவில்லை.
பிரித்தானிய மன்னர் சார்லசின் கார், சீஸ் மற்றும் ஒயின் ஆகியவை கலந்த ஒரு கலவையில்தான் இயங்குகிறது என்பது ஆச்சரியமான தகவல்தான்.
சார்லசுக்கு இரண்டு விடயங்கள் பிடிக்கும். ஒன்று இயற்கை, இன்னொன்று கார்கள்!
Image: Max Mumby/Indigo/Getty Images
ஆனால், இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை ஆயிற்றே. காரிலிருந்து வெளியேறும் புகை இயற்கையை மாசுபடுத்தும். ஆகவே, தனது காருக்கு சீஸ் மற்றும் ஒயின் ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் காரின் எஞ்சினை மாற்றி அமைக்குமாறு ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்திடம் கேட்டாராம் சார்லஸ்.
அப்படிச் செய்தால் மொத்த காரும் நாசமாகிவிடும் என்றார்களாம் அந்நிறுவனத்தார். அப்படியானால், நான் அந்த காரை பயன்படுத்தமாட்டேன் என்று சார்லஸ் கூற, பின்னர் அவர் சொன்னதுபோலவே காரை மாற்றினார்களாம்.
Image: Max Mumby/Indigo/Getty Images
பிறகு சார்லஸ் காரை இயக்க, நீங்கள் காரை இயக்கும்போது அதிலிருந்து வரும் வாசனை அருமையாக உள்ளது என்று ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தாரே பாராட்டினார்களாம்.
இன்னொரு விடயம் என்னவென்றால், தனது மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு திருமணமானபோது தனது காரை புதுமணத் தம்பதியருக்கு இரவலாகக் கொடுத்தாராம் மன்னர்.