இளம்பெண்ணுக்கு பிறந்த நாள் பரிசாக வந்த DNA கிட்... அது கொண்டுவந்த பெரும் குழப்பம்!
இளம்பெண் ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக DNA கிட் ஒன்று கிடைத்துள்ளது.
மான்செஸ்டரைச் சேர்ந்த Lydia Ellen என்ற அந்த பெண், தனது உறவினர்களை குறித்து அறிந்துகொள்வதற்காக அந்த கிட்டை பயன்படுத்த, முதலில் அவருக்கு உலகம் முழுவதும் உறவினர்கள் இருப்பதாக சோதனை முடிவு தெரிவிக்க, பிரமித்துப் போயுள்ளார் அவர்.
அடுத்து அவருக்கு கிடைத்த செய்தியில் அவர் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்.
ஆம், அவரது பிறந்த திகதியை அவர் உள்ளிட, அந்த திகதியில் Lydia Ellen என்ற பெயரில் ஒருவர் பிறந்ததற்கான ஆதாரமே இல்லை என தெரியவர, குழம்பித்தான் போனார் அந்த பெண்.
இவ்வளவு நாளும், தான் 1998ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக எண்ணிக்கொண்டிருக்க, மருத்துவ சான்றிதழ்கள் அவர் 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்ததாக தெரிவித்தன.
இந்த விடயத்தை அவர் வீடியோ ஒன்றில் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ய, அவரது வீடியோவை மூன்று மில்லியன் பேர் பார்வையிட்டதுடன், அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள் பயனர்கள்.
ஒருவேளை உங்களை தத்தெடுத்திருப்பார்களோ என ஒருவர் கேட்க மற்றொருவர், நீங்கள் கடத்தப்பட்ட குழந்தையாக இருப்பீர்களோ என பீதியைக் கிளப்பியுள்ளார்.
இன்னொருவர், சரி, நீங்கள் பள்ளிக்கு போனீர்களா இல்லையா? ஒரு இரண்டு வயது குழந்தைக்கும் ஐந்து வயது குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாமலா இருந்திருக்கும் என்கிறார்!
