பிரான்ஸ் தலைநகரில் பலரை கடித்துக் குதறிய நாய்: தெரியவந்துள்ள பயங்கர உண்மை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நாய் ஒன்று பலரைக் கடித்துக் குதறியது.
பின்னர் அது சாதாரண ஒரு விடயம் அல்ல என தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நாய் ஒன்று பலரைக் கடித்துக் குதறிய நிலையில், அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டதாக கருதப்படும் வெறிநாய்க்கடி அல்லது ரேபீஸ் என்னும் பயங்கர வைரஸ் தொற்றுக்கு ஆளான நாய் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை Pasteur Institute உறுதி செய்துள்ளது.
அந்த நாய் தற்போது மற்றவர்களுக்கு பதிப்பை ஏற்படுத்தாத ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கு முன் அது பலரைக் கடித்துக் குதறிவிட்டது.
வெறிநாயிடம் கடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதுபோக, அந்த நாயைத் தொட்டவர்கள் போன்ற மற்றவர்களிலும், சிகிச்சை தேவை என கருதப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பிரன்ஸ் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்சைப் பொருத்தவரையில், 2001ஆம் ஆண்டிலேயே ரேபீஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அந்த நோய் காணப்படுகிறது.
நாய்கள், பூனைகள் முதலான செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.