பிரித்தானிய நிதி அமைச்சர் பதவிநீக்கம்: பிரித்தானிய அரசியலில் அதிரடி திருப்பம்.
பிரித்தானிய நிதி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு புதிதாக பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு வாரங்களே ஆன நிலையில், திடீர் திருப்பங்கள் பல நிகழ்ந்துவருகின்றன.
பிரதமர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையின் நிர்வாகக் குளறுபடிகள் பிரித்தானிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன், லிஸ் ட்ரஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் அல்லது ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான Paul Goodman தெரிவித்திருந்தார்.
மற்றொரு பக்கம், பிரித்தானிய நிதி அமைச்சரான Kwasi Kwarteng பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக The Times பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பிரித்தானிய நிதி அமைச்சரான Kwasi Kwarteng பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Kwarteng இனி பிரித்தானிய நிதி அமைச்சர் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.
Kwasi Kwarteng பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்த காலமே சேன்சலராக பதவி வகித்தவர் என்ற பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.