குடிபோதையில் உளறிய அத்தை... பிரித்தானியரின் வாழ்வையே மாற்றிய தருணம்
பிரித்தானியர் ஒருவர், தன் அத்தை வீட்டில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டபோது, குடிபோதையில் அவரது அத்தை உளறிய விடயம், அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது... மகிழ்ச்சியாக!
குடிபோதையில் அத்தை உளறிய உண்மை
லண்டனில் வாழும் லீ (Lee Langton), தன் அத்தையான லிஸ் (Liz) வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அத்தை லிஸ் கொஞ்சம் ஓவராக குடித்தபிறகு, குடிபோதையில், லீ, நீ உன் அண்ணன் ரிச்சர்டை எப்போதாவது பார்த்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த லீ, என்னது எனக்கு அண்ணனா? என்று அத்தையைக் கேள்விகளால் துருவி எடுக்க, அப்போதுதான் அந்த உண்மையைக் கூறியிருக்கிறார் அத்தை லிஸ்.
Image: BBC/Reunion Hotel
தத்துக்கொடுக்கப்பட்ட அண்ணன்
ஆம், லீயின் அண்ணனான ரிச்சர்ட் பிறந்து ஆறு மாதங்களானபோது, அவரது தாயான ஆனீ (Annie)யால் அவரை வளர்க்கமுடியாமல், அவரைத் தத்துக்கொடுத்துள்ளார்.
ரிச்சர்டைத் தத்தெடுத்த Stephen என்பவருக்கு ஆனியைக் குறித்து எந்த விவரமும் தெரியாததால், தனக்கு ஒரு தம்பி இருப்பது குறித்து தெரியாமலே இருந்திருக்கிறார் ரிச்சர்ட்.
(Image: Lee Langton)
உண்மை தெரியவந்ததால் மகிழ்ச்சி
இந்நிலையில், அத்தை உளறிய உண்மையால் லீக்கு அண்ணனைக் குறித்து தெரியவரவே, அண்ணனும் தம்பியும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவுக்குத் தன்னை பிடிக்கவில்லை, அதனால்தான் தன்னை தத்துக் கொடுத்துவிட்டார்கள் என இவ்வளவு காலம் எண்ணிக்கொண்டிருந்த ரிச்சர்டுக்கு உண்மை தெரியவர, அடடா, அம்மா இருந்திருந்தால், அவர் தோள் மீது கைபோட்டு, எனக்குக் கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி அம்மா என்று சொல்லியிருப்பேனே என்கிறார் ரிச்சர்ட்.
Image: BBC/Reunion Hotel
ஆம், ஆனீ, 1999ஆம் ஆண்டு, தனது 56ஆவது வயதில் மரணமடைந்துவிட்டார். அவர் ரிச்சர்ட் குறித்த உண்மையை இரகசியமாக வைத்திருக்க, அத்தை லிஸ் உண்மையை உளறிக்கொட்ட, இப்போது எல்லாமே மகிழ்ச்சியாக மாற, குடும்பங்கள் இணைந்து ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் எனவென்றால், இங்கிலாந்தில் வாழும் அண்ணன் தம்பி இருவருக்குமே பல ஒற்றுமைகள். உதாரணமாக, இருவருக்கும் இசைக்கச்சேரிகள் பிடிக்கும். ஆக, தெரியாமலே தாங்கள் பலமுறை சந்தித்துக்கொண்டிருக்கக்கூட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் இருவரும்!
Image: BBC/Reunion Hotel
Image: BBC/Reunion Hotel