மிளகாய் தூள் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி.., வெளிநாடு வரை சென்ற வியாபாரம்
மிளகாய் தூளை விற்று உலக சந்தைகளில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருபவரை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்?
இந்திய மாநிலமான குஜராத், அம்ராபூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தர்மேஷ் பாய் மதுகியா. இவர், தனக்கு சொந்தமாக உள்ள 13 ஏக்கர் நிலத்தில் மிளகாய் விளைவித்து வருகிறார். பின்னர் அந்த மிளகாயை காய வைத்து தூளாக்கி உலக சந்தைகளில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வருமானம் பெறுகிறார்.
சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் தர்மேஷ் -க்கு சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இவரின் செலவை தவிர்த்து பார்த்தால் வருடத்திற்கு வருமானம் ரூ.90 லட்ச ரூபாய் வரை இருப்பது தெரியவந்தது.
அதாவது இவருடைய நிலத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் 60000 கிலோ மிளகாய் விளைகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ சிவப்பு வத்தல் தூள் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. அதுவும் மொத்த சரக்கு கடையில் வத்தல் தூளை ரூ.250-க்கு விற்பனை செய்தால் கூட, தோராயமாக ரூ.1.5 கோடி வருமானம் கிடைக்கிறது.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மேஷ், காஷ்மீரி தாபி போன்ற மிளகாய் வகைகளை பயிரிடுவதில் சிறப்பு வாய்ந்தவர். இவர் மிளகாயை அப்படியே விற்காமல் தூளாக்கி விற்பதால் தான் நல்ல வருமானம் கிடைக்கிறது.
ஒரு கிலோ காஷ்மீரி மிளகாய் தூள் ரூ.450 -க்கு கிடைக்கிறது. மேலும், இவருடைய மிளகாய் தூள் அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கும் செல்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |