நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இயற்கையான முறைகள் நரைமுடியை விரட்டலாம்.
Shutterstock
1. தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1/4 கப்
- தேங்காய் எண்ணெய்- 1/4 கப்
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை எடுத்து லேசாக சூடுபடுத்தவும். தீயை அணைத்து 10 முதல் 12 கறிவேப்பிலை சேர்க்கவும்.
எண்ணெயில் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். சிறிது ஆறிய பிறகு தலைமுடியில் தடவவும். 2 மணி நேரம் கழித்து நன்றாக ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம்.
இதை வாரத்திற்கு 2 முறை செய்யதால் இளநரை மறைந்து கருமையான கூந்தலுக்கு வழிவகுக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 1/2 கப்
- கறிவேப்பிலை- 1/4 கப்
செய்முறை
கறிவேப்பிலை மற்றும் தயிர் எடுத்துக் நன்றாக கலந்து அதன் பேஸ்ட்டை உருவாக்கவும். இ
தை தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருந்து தலையை அலசிக்கொள்ளலாம். இதை வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
3. தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கப்
- சுடுதண்ணீர்
செய்முறை
கறிவேப்பிலை சுடுதண்ணீரில் 15 முதல் 20 கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்றாக கொதிக்க வைக்கவும்.
கலவையை குளிர்வித்த பிறகு வேகவைத்த கறிவேப்பிலையை தலையில் தடவி குளிப்பது இளநரையை போக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |