பிரான்சில் திரும்பப் பெறப்படும் ஒரு உணவுப்பொருள்: காரணம் இதுதான்!
பிரான்சில் உணவுப்பொருள் ஒன்றை திருப்பிக் கொடுக்க வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்த உணவுப்பொருளின் உறையில் தவறான காலாவதி திகதி அச்சிடப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
பிரான்ஸ் முழுவதிலும் புகையூட்டப்பட்ட சால்மன் மீன்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
அந்த உணவு வைக்கப்பட்டுள்ள உறையில் காலாவதி திகதி தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக அந்த உணவுப்பொருளை விற்பனை செய்யும் Carrefour பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.
Pic: hlphoto / Shutterstock
Delpeyrat பிராண்ட் Scottish smoked salmon என்னும் அந்த தயாரிப்பின் விவரங்கள் பின்வருமாறு:
Barcode : 3067163649634,
Batch number : F2570028
பயன்படுத்த உகந்த திகதி:ஜனவரி 20, 2023.
இந்த தயாரிப்பு, பிரான்ஸ் முழுவதிலுமுள்ள Carrefour பல்பொருள் அங்காடிகளில் அக்டோபர் 10 முதல் 19ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் இந்த உணவுப்பொருளை யாராவது வாங்கியிருந்தால், அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அதற்காக செலுத்திய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.