விளையாடிக் கொண்டிருந்த கால்பந்தாட்ட வீரர் மயங்கி விழுந்து மரணம்
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே கால்பந்தாட்ட வீரர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்தாட்ட வீரர் மரணம்
தமிழக மாவட்டமான ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர், அங்கு குடும்பத்தோடு வசித்து வருகிறார். பத்திரம் எழுதும் வேலை செய்து வரும் இவர், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் கால்பந்து விளையாடி வருவார்.
இந்நிலையில், இன்று காலை மைதானத்திற்கு நண்பர்களுடன் சென்று கால்பந்து விளையாடியுள்ளார். அப்போது, திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார்.
அதனை பார்த்த சக வீரர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சுப்ரமணி சுயநினைவில்லாமல் இருந்ததால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சக கால்பந்து வீரர்களும், சுப்ரமணியின் பெற்றோரும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |