சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த வெளிநாட்டவர்: ஏற்க மறுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அபராதம்
வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற தொடர்ந்து முயற்சித்தும் அவரது விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில், உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சுவிஸ் குடியுரிமை பெற முயன்ற நபர்
சிரியா நாட்டவரான 46 வயது நபர் ஒருவர், 12 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் சுவிஸ் குடியுரிமை பெற முயன்றுவருகிறார்.
ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பத்தை உள்ளூர் அதிகாரிகள் நிராகரிக்கவே, பெடரல் நீதிமன்றம் சென்றார் அவர்.
அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், அவர் இதுவரை செலவு செய்த சுமார் 50,000 சுவிஸ் ஃப்ராங்குகளை அவருக்கு திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், அவருக்கு 8,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடும் வழங்கவேண்டும் என உள்ளூர் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Thurgau மாகாணத்திலுள்ள Romanshorn என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த அவர், தனக்கும் சுவிஸ் நாட்டவரான தனது மனைவிக்கும் இந்த மாகாணத்தில் வரவேற்பில்லை என முடிவு செய்து சூரிச் மாகாணத்தில் குடியேற முடிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |