திருட்டுக் காருடன் சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய வெளிநாட்டவர்: தெரியவந்த அதிரவைக்கும் தகவல்
வெளிநாட்டவர் ஒருவர் திருட்டுக் காருடன் சுவிஸ் பொலிசாரிடம் சிக்கினார்.
அவர் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துத் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என பொலிசார் நம்புகிறார்கள்.
சுவிட்சர்லாந்துக்குள் திருட்டுக் காருடன் நுழைந்த வெளிநாட்டவர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், அவருக்கும் சுவிட்சர்லாந்தில் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துத் திருடும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என பொலிசார் நம்புகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் 2019 முதல் தொடர்ச்சியாக பல ஏடிஎம்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த சம்பவங்களில் வெளிநாட்டுக் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சுவிஸ் பொலிசார் சந்தேகித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிக்கிய 51 வயது நபர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பயணித்த காரை பொலிசார் சோதனையிட்டபோது, காருக்குள் வெடிமருந்துகள் மற்றும் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்க்கத் தேவையான உபகரணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஏற்கனவே, ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ரொமேனியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 74 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.