பரோல் கைதியை மருத்துவமனைக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற கும்பல்.., வெளியான அதிர்ச்சி வீடியோ
பரோலில் வெளிவந்த கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்து கும்பல் ஒன்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
இந்திய மாநிலமான பீகார், பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் சந்தன் என்பவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு, மருத்துவமனைக்குள் புகுந்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பித்துச் சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி பரோல் கைதி சந்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பீகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அம்மாநில முதல்வருக்கு நெருக்கடியாக இருக்கிறது.
78th murder in 46 days in Bihar 🚨
— Ankit Mayank (@mr_mayank) July 17, 2025
Few goons entered a top hospital in Patna, kílled a man & ran away
This is Gangs of Wasseypur in real life in Bihar or even worse 💔
But no Media will call it Jungle Raj of BJP 🙂👍 pic.twitter.com/8XB2BGkYsK
இந்த சம்பவத்திற்கு முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |