ஆறு வருடங்களுக்கு முன் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட ஜேர்மானியர்: ரகசிய காதலியுடன் சிக்கினார்
ஆறு வருடங்களுக்கு முன் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட ஜேர்மானிய அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், தனது ரகசிய காதலியுடன் ரஷ்யாவில் வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன் மாயமான நபர்
ஜேர்மானிய அமெரிக்கக் கோடீஸ்வரரான கார்ல் எரிவன் ஹாப் (Karl-Erivan Haub) என்பவர், 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது மாயமானார்.
அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவராததால், 2021ஆம் ஆண்டு, ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று அவர் மரணமடைந்ததாக சட்டப்படி அறிவித்தது.

அதிரவைத்துள்ள சமீபத்திய தகவல்
இந்நிலையில், கார்ல் மாஸ்கோவில் இருப்பது தெரியவந்துள்ள விடயம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. வெரோனிகா (Veronika Ermilova) என்னும் இளம்பெண்ணுடன் அவர் மாஸ்கோவில் இருப்பதை ஜேர்மன் ஊடகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உடைய கார்ல், வெரோனிகாவுடன் ரகசியமாக இரட்டை வாழ்க்கை நடத்திவந்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டு கார்ல் காணாமல் போவதற்கு மூன்று நாட்களுக்கு முன், அவர் வெரோனிகாவை 13 முறை மொபைலில் அழைத்து பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆகவே, அவர் நன்றாக திட்டமிட்டே காணாமல் போனதாக நாடமாடி, ஏமாற்றி, மாஸ்கோ மற்றும் வெரோனிகாவின் உதவியுடன், தான் இறந்துபோனதாக மக்களை நம்பவைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், அவர் ரஷ்ய ஆதரவு ஏஜண்டாக செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        