திடீரென்று மாயமான இளம் பெண்... பொலிசாருக்கு கிடைத்த தகவல்: காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்
பிரித்தானியாவில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மாயமான இளம் பெண் மூன்று நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
பிரித்தானியாவின் ஹோவ் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ஆமி ஸ்பிரிங்கர். உடலளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19ம் திகதி திடீரென்று அவரது குடியிருப்பில் இருந்து மாயமானார்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார், தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு போர்ட்ஸ்லேட் அருகே வனப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரியவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சடலத்தை அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்படும் எனவும், உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உடலளவில் பாதிக்கப்பட்டவர் ஆமி ஸ்பிரிங்கர் என்பதால், பொலிசார் ஊடகங்களின் உதவியையும் நாடியிருந்தனர்.
மட்டுமின்றி பொதுமக்கள் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தி உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தனர்.
ஆமி ஸ்பிரிங்கர் மாயமானதன் நோக்கம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை எனவும், உறவினர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூராய்வுக்கு பின்னரே, மரண காரணம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
