சொந்த ஊருக்கு திரும்பிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! பர்தா அணியாததால் சுட்டுக்கொன்ற தலிப்பான்கள்
ஆப்கானிஸ்தாவில் பர்தா அணியாத இளம்பெண்ணை தலிபான்கள் ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பல பகுதிகளை தலிப்பான் அமைப்பினர் ஆக்கிரமித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் மக்களிடம் இஸ்லாமிய முறையை கடுமையாக திணித்து வருகின்றனர்.
பெண்கள் பர்தா அணிய வேண்டும், கல்வி கற்க கூடாது, வேலைக்கு செல்ல கூடாது போன்ற சட்டங்களை அமல்படுத்தி பெண்களை துன்புறுத்தி வருகின்றனர்.
இதனை மீறினால் ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொன்று மண்ணில் புதைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெண்ணுக்கு எதிராக ஒரு கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நசானீன்(21). இவர் தனது சொந்த மாவட்டத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தலிப்பான் அமைப்பினர் வழிமறைத்து பெண்ணிடம் பர்தா அணியும் படி கூறியுள்ளனர்.
ஆனால் அந்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.