நீண்ட கால கொரோனா தொற்றுக்கு ஆளாகும் ஒரு கூட்டம் நோயாளிகள்: அவர்கள் உடலில் கண்டறியப்பட்டுள்ள பிரச்சினை
கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சிலர் குணமடைந்துவிடுகிறார்கள், சிலர் உயிரிழந்துவிடுகிறார்கள்.
இதுபோக இன்னொரு கூட்டத்தார் இருக்கிறார்கள், அவர்கள் சீக்கிரம் குணமடைவதும் இல்லை, உயிரிழப்பதும் இல்லை, அவர்கள் நீண்ட காலம் கொரோனாவால் அவதியுறுகிறார்கள்.
அப்படி நீண்ட காலம் அவதியுறுவோருக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, நீண்ட கால கொரோனாவால் அவதியுறுவோர், கொரோனா தாக்கி பல மாதங்கள் ஆனபின்பும், நீண்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் நுரையீரல் பாதிப்பால் அவதியுற்று வருவதாக தெரியவந்துள்ளது.
Bern பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் Bern பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நீண்ட கால கொரோனா குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது சுவிஸ் மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 113 பேரை ஆய்வுசெய்தார்கள் ஆய்வாளர்கள். அதில் 66 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள், 47 பேர் ஓரளவு குறைவாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு அந்த குறைந்த பாதிப்புகொண்டவர்கள் முற்றிலும் குணமடைந்துவிட்ட நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நுரையீரல் பாதிப்பு எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. ஆகவே, அவர்களுக்கு நீண்டகால கண்காணிப்பும் சிகிச்சையும் அவசரமும் அவசியமும் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர்கள் குணமடைந்தபின்னரும் அவர்களை கவனித்துக்கொள்வதும், இதேபோன்ற அபாயத்திலிருப்போருக்கு தடுப்பூசி போடுவதும் அவசியமாகிறது என்பது இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.