பிரான்சில் அதிகரித்துவரும் ஒரு குற்றச்செயல்
பிரான்சில் வாகன திருட்டுகள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஆண்டில் மிக அதிக அளவில் வாகன திருட்டுகள் நடந்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளன தெரியுமா?
2022ஆம் ஆண்டில் பிரான்சில் 133,800 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 9 சதவிகிதம் அதிகமாகும்.
திருடப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், பிரான்சில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது என்று பொருள் ஆகும்.
எந்த பகுதியில் அதிக அளவில் திருட்டு நடந்துள்ளது?
உண்மையில் பிரான்சின் அனைத்துப்பகுதிகளிலும் திருட்டு நடந்துள்ளது. Ile-de-France பகுதியில், 1,000 வாகனங்களுக்கு 5.9 வாகனங்கள், அதாவது 4% வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
Provence-Alpes-Côte-d’Azur பகுதியில் 1,000 வாகனங்களுக்கு 4.2 வாகனங்கள், அதாவது 12% வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
Auvergne-Rhône-Alpes பகுதியில் 1,000 வாகனங்களுக்கு 2.9 வாகனங்கள், அதாவது 11% வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
பொதுவாக குறைந்த அளவில் வாகன திருட்டு நடக்கும் Brittany, Centre-Val-de-Loire மற்றும் Bourgogne-Franche-Comté ஆகிய பகுதிகளிலும் திருட்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.