வீடியோ அழைப்பிலிருந்த பெண்... திடீரென வெடித்துச் சிதறிய வீடு: கண் முன்னால் நிகழ்ந்த மரணத்தைக் கண்டு அதிர்ந்த நண்பர்கள்
பிரித்தானியாவில் தன் நண்பர்களுடன் வீடியோ அழைப்பிலிருந்த பெண் ஒருவர், தங்கள் கண் முன்பே பலியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் அவரது நண்பர்கள்.
கிரேட்டர் மான்செஸ்டரில் ஒரு வீட்டில் 61 வயது பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அவரது வீட்டில் ஏதோ வெடிக்க, அந்த வீடு முழுவதும் தரை மட்டமாகியுள்ளது.
கண் முன்னே தோழி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள் அந்த பெண்ணின் நண்பர்கள்.
அந்த வெடி விபத்தில், அருகிலுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
பக்கத்து வீடு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் உடனடியாக அங்கு ஓடிச்சென்று இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த Stephanie, என்ற பெண்ணையும், அவரது மகளான Evie என்ற பெண்ணையும், Besti என்ற நாயையும் மீட்டுள்ளார்.
பின்னர் தீயணைப்புப் படையினர் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த அந்த 61 வயது பெண்ணின் உடலை வெளியே எடுத்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 30 வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்



