பல் துலக்காமல் முத்தமிட கூடாது! மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கொடூர கணவன்
பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமான கொலை செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று அறங்கேறியுள்ளது.
அவினாஷ் என்பவர் தீபிகா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து இருக்கிறார். இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பெங்களூருவில் வேலை செய்து வந்ததால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலக்காடு வந்து மனைவி குழந்தைகளை பார்த்து விட்டுச் செல்வார்.
இந்த நிலையில் மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக அண்மையில் பாலக்காடு வந்த அவினாஷ் தூங்கி எழுந்து பல் துலக்காமலேயே தனது குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்துள்ளார். இதனை கண்ட தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாது. வைரஸ் பிரச்சினை வரும் என்று கோபமாக சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் தீபிகாவிடம் கோபத்தைக் காட்ட , இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய போது அங்கிருந்த கத்தியை எடுத்து தீபிகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
தீபிகா ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்திருந்த நிலையில் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அவரின் கணவர் அவினாஷை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.