66 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவிக்கு கோடிக்கணக்கான சொத்தில் சல்லிக்காசு கூட கொடுக்காத கணவர்: நீதிமன்றம் அதிரடி...
66 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவிக்கு கோடிக்கணக்கான சொத்தில் சல்லிக்காசு கூட கொடுக்காத கணவர்: நீதிமன்றம் அதிரடி...
66 ஆண்டுகள் வாழ்ந்து, தோளோடு தோள் நின்று உழைத்த மனைவி
1955ஆம் ஆண்டு, ஹர்பான்ஸ் கௌர்க்கும் (Harbans Kaur) கர்னயில் சிங்குக்கும் (Karnail Singh) திருமணம் ஆனது. தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள் பிறந்து ஒரு பிள்ளை இறந்துபோனது. 66 ஆண்டுகள் தம்பதியர் இணைந்து வாழ்ந்த நிலையில், 2021ஆம் ஆண்டு மரணமடைந்தார் சிங்.
இந்நிலையில், 2005ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25ஆம் திகதியிட்ட உயில் ஒன்றில், தன் சொத்துக்கள் முழுவதையும் தன் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் சிங் எழுதிவைத்திருப்பது தெரியவந்தது.
தம்பதியரின் நான்கு பெண் பிள்ளைகளுக்கோ, 66 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவிக்கோ, சிங் சல்லிக்காசு கூட எழுதிவைக்கவில்லை. அதாவது, தன் சொத்து முழுவதும் தனது ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே என உயில் எழுதிவைத்துள்ளார் அவர்.
ஆகவே, மாதம் 12,000 பவுண்டுகள் அரசு உதவித்தொகையில் வாழ்ந்துவந்துள்ளார் ஹர்பான்ஸ்.
Picture: Getty Images
நீதிபதி அதிரடி தீர்ப்பு
வழக்கு நீதிமன்றம் வந்த நிலையில், விசாரணையில், ஹர்பான்ஸ் 66 ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்ததுடன், அவர் நடத்திய ஆடை தயாரிப்பு தொழிலில் கணவனோடு தோளோடு தோள் நின்று உழைத்ததும் உறுதிசெய்யப்பட்டது.
ஆகவே, சிங்குடைய எஸ்டேட்டின் மதிப்பில் சரி பாதித் தொகையை அவரது மனைவியான ஹர்பான்ஸ்க்கு அளிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அந்த எஸ்டேட்டின் மதிப்பு சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகள் முதல் 1.9 மில்லியன் பவுண்டுகள் வரை இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Picture: Getty Images