உயிர் வாழ போராடிய இந்திய இளம்பெண்... கைவிட்ட பிரித்தானிய மருத்துவமனையும் நீதிமன்றமும்: பெற்றோர் குமுறல்
பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் ஒருவர், ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையும் நீதிமன்றமும் கைவிட, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்
இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த திருமலேஷ் (Thirumalesh Chellamal Hemachandran), ரேவதி (Revathi Malesh Thirumalesh) தம்பதியரின் பிள்ளைகள் வர்ஷன் (Varshan Chellamal Thirumalesh) மற்றும் சுதிக்ஷா (Sudiksha Thirumalesh, 19).
சுதிக்ஷா, அபூர்வ மைட்டோகாண்ட்ரியா நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளாள். சுதிக்ஷா ஓராண்டாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கனடா போன்ற ஒரு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாள் அவள்.
credit Mark large
இது என்னுடைய விருப்பம், உயிரிழக்க நேரிடும் என்றாலும், வாழ முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று வாய் விட்டே சொல்லியிருக்கிறாள் சுதிக்ஷா. ஆனால், அவள் வேகமாக உயிரிழந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டிருக்கிறது மருத்துவமனை.
கடைசியாக நீதிமன்றம் காப்பாற்றும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றமோ, வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டதுடன், Mrs Justice Roberts என்னும் நீதிபதியும், தன் சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் நிலையில் சுதிக்ஷாவின் மன நிலை இல்லை என்னும் தீர்ப்பையே அளித்துள்ளார்.
Daily Mail
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுதிக்ஷாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்காக நிதி திரட்டமுடியாமல் போயுள்ளது அவளது குடும்பத்துக்கு.
தானாக முடிவெடுக்க முடியாதவர்களுக்காக இயங்கும் Court of Protection என்னும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமலே கண்ணை மூடிவிட்டாள் சுதிக்ஷா. ஆம், செப்டம்பர் 12அம் திகதி சுதிக்ஷா மரணமடைந்துவிட்டாள்.
அவளது பெயர் சுதிக்ஷா திருமலேஷ்
இந்நிலையில், தாங்கள் மருத்துவ அமைப்பாலும், நீதி அமைப்பாலும் கைவிடப்பட்டுவிட்டதாக கூறி, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்கள் சுதிக்ஷாவின் குடும்பத்தினர்.
Daily Mail
சுதிக்ஷாவின் குடும்பத்தினர் நேற்று Court of Protection நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த நிலையில், இதுவரை வழக்கில் சுதிக்ஷாவின் பெயர் ST என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட நிலையில், அவளது பெயரை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்தது.
என் தங்கை பெயர் சுதிக்ஷா, அவள் பெயர் ST அல்ல, அவள் பெயர் சுதிக்ஷா திருமலேஷ் என்று கூறுகிறார் சுதிக்ஷாவின் சகோதரரான வர்ஷன்.
Daily Mail
நாங்கள் பழிவாங்குவதற்காக வரவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும், சுதிக்ஷாவின் கதையை நாங்கள் வெளி உலகுக்குச் சொல்லவேண்டும் என்று கூறும் வர்ஷன், சுதிக்ஷாவுக்காக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், சுதிக்ஷா சாகவேண்டும் என்று மட்டுமே விரும்பிய சில மருத்துவர்களுக்கு, உங்களை நாங்கள் மன்னிக்கிறோம், நாங்கள் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள், வாழ்வு, அன்பு மற்றும் மன்னிப்பை நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |