தமிழ் இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் திடீர் மரணம்!
தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார்.
தமிழில் மதராசபட்டினம், தெய்வத்திருமகள் படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ஏ.எல்.விஜய்.
நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்ட விஜய், அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மருத்துவர் ஐஸ்வர்யாவை அவர் திருமணம் செய்துகொண்டார். ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைத்துறையை சேர்ந்த பலரும் ஏ.எல்.விஜய்யின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா சில படங்களில் கதாநாயகனாகவும், அவரது தந்தை எ.எல்.அழகப்பன் ஈசன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.