இந்திய திரைப்படம் ஒன்றில் நடித்த பிரித்தானிய மகாராணியாரை போலவே தோற்றம் கொண்ட பெண்: தற்போது எடுத்துள்ள முடிவு...
பிரித்தானிய மகாராணியாரைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண் பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார்.
மகாராணியார் மறைந்துவிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இனி அவரைப்போல உடையணிந்து வேலை செய்யப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் மேரி.
பிரித்தானிய மகாராணியாரைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண் பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார்.
மேரி (Mary Reynolds, 89) என்னும் எசெக்ஸை சேர்ந்த அந்த பெண், அப்படியே பிரித்தானிய மகாராணியாரைப் போலவே இருப்பதால், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரபலங்கள் உட்பட, மக்கள் போட்டி போடுவதுண்டு.
1988ஆம் ஆண்டு, மேரி பிரித்தானிய மகாராணியாரைப் போலவே இருக்கிறார் என்று தெரியவந்தபின், ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் சர் ரோஜர் மூர் என்னும் நடிகருடனும் நடித்துள்ளார் மேரி.
Nick Potts/PA
சமீபத்தில், மகாராணியார் மரணமடைந்த பிறகு, ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று மேரியை அணுகி மகாராணியாரைப் போல உடையணிந்து தங்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதாம். ஆனால், மகாராணியார் இயற்கை எய்திவிட்டார்கள். இனி அவரைப்போல நான் உடையணியவேண்டுமானால் கருப்பு உடை மட்டும்தான் அணிவேன் என்று கூறிவிட்டாராம் மேரி.
ஒருமுறை லண்டனில் படமாக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் ஒன்றில் நடித்தாராம் மேரி. அப்போது ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அவரை சூழ்ந்துகொள்ள, பின்னர் பாதுகாவலர்கள் வந்து மேரியை மீட்கும் நிலை ஏற்பட்டதாம்.
Yui Mok/PA
உலகில் வேறெங்கும் மகாராணியாரைப் போல் யாரும் கிடையாது என்று கூறும் மேரி, மகாராணியார் மறைந்துவிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இனி அவரைப்போல உடையணிந்து வேலை செய்யப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
ஒரு முக்கிய விடயம், மேரி ஒருமுறை கூட மகாராணியாரை நேரில் சந்தித்ததில்லையாம்!
Yui Mok/PA