ஹரி மேகனை பேட்டி எடுத்த ஓபரா வின்ஃப்ரேக்கு மேகனின் தந்தை கொடுத்துள்ள கடிதம்: என்ன எழுதியிருக்கிறார்?
தன் மகளை பேட்டி எடுத்தது போலவே, தன்னையும் பேட்டி எடுக்குமாறு, இளவரசர் ஹரியின் மனைவியான மேகனின் தந்தை, ஓபரா வின்ஃப்ரேக்கு கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
மேகனின் தந்தையான தாமஸ் மார்க்கல் (76), நேற்று கலிபோர்னியாவிலுள்ள ஓபராவின் பங்களாவிற்கு தானே நேரில் சென்று, கடிதம் ஒன்றை அங்குள்ள பாதுகாவலர் ஒருவரிடம் கொடுத்தார்.
அவர், தன் பக்கத்துக் கதையை ஓபராவிடம் சொல்ல விரும்புவதாக அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக தெரிகிறது. ஓபராவுடனான பேட்டியின்போது, மேகன் தன் தந்தை தனக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
ஓபரா, பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது குடும்பமும் வாழும் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவுக்குள் உள்ள மாளிகையில்தான் வசித்து வருகிறார்.
மேகனோ, ஹரியோ அல்லது அவர்களது மகனும், தாமஸின் பேரனுமான ஆர்ச்சியோ, தற்போது அமெரிக்காவிலேயே வாழ்ந்துவந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட தாமஸை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

