உலகில் 130 நாடுகளுக்கு ஒரு தடுப்பூசியேனும் கிடைக்கவில்லை! மியன்மாறில் வலுபெற்று வரும் போராட்டங்கள்..உலகச் செய்திகள் ஒரு பார்வை
உலகம் முழுவதும் கொரோனா பரவலாக சிக்கி தவித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசிக்காக போராடி கொண்டு வருகின்றனர்.
ஆனால் உலகளவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு தடுப்பூசிகளில், சுமார் 75 வீதம், 10 நாடுகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகளவில் குறைந்தது 110 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியில் பெர்சிவரன்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இன்று தரையிறக்கியுள்ளது.
இப்படி பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.