கனடாவில் குடிபெயர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்! இவர் மனைவி... இந்த சாதனை ஈழத்தமிழர் பற்றி தெரியுமா?
கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர் ஆவார்.
கே. எஸ். பாலச்சந்திரன் 10 ஜூலை 1944 அன்று யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.
ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.
இவர் கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
பன்முகத்திறமை கொண்ட இவர் 1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர்.
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டார்.
வானொலி, மேடை, தொலைக்காட்சி, எழுத்து என இவரது எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் நகைச்சுவையை வெளிப்படுத்தினார் கே. எஸ். பாலச்சந்திரன். தனி நடிப்பு என்ற நகைச்சுவை மேடை நிகழ்வை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்
கே. எஸ். பாலச்சந்திரனுக்கு எட்னா கனகேஸ்வரி என்ற மனைவியும், சுபாஷினி, வசீகரன் என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இவர் கடந்த 26.02.2014 அன்று உடல்நலக்குறைவால் கனடாவில் காலமானார்.