வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அதேபோல், தமிழகத்திலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20ஆம் திகதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |