வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா?
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஓக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதன்பின்னர், வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஓக்டோபர் 23) டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி செல்லும்.
இதையடுத்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் டானா புயல் வலுப்பெறும். குறிப்பாக இந்த டானா புயலால் தமிழகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |