உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
வங்கக் கடலில் இரு நாள்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இரு நாள்களில் உருவாகக்கூடும்.

அதேநேரத்தில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பிப்ரவரி 18ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
மேலும், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |