நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்தம்.., 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடையகைகூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |