வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த பகுதிகளில் மழை?
ஆந்திரா கடற்கரையில் இருந்து தென் கடலோர மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று தென்கடலோர மியான்மர் பகுதியிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டுள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது.
பின் தாமதமாகும் சூழல் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில், நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 28ஆம் திகதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |