எரிவாயு தட்டுப்பாடு... சுடுதண்ணீர் தொடர்பில் ஜேர்மன் நகரம் ஒன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் முறையில்தான் இனி சுடுதண்ணீர் வழங்கப்படும் என ஜேர்மன் நகரம் ஒன்று அறிவித்துள்ளது.
வடக்கு ஜேர்மன் நகரமான Hamburgஇல், இனி சுடுதண்ணீர் ரேஷன் முறையில்தான் வழங்கப்படும் என்றும், எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் நிலையில், அறைகளை சூடாக்கும் வெப்பநிலை குறைக்கப்படும் என்றும் அந்நகர சுற்றுச்சூழல் செனேட்டர் தெரிவித்துள்ளார்.
அதீத எரிவாயு தட்டுப்பாடு திடீரென ஏற்படும் பட்சத்தில், அவசரத் தேவை ஏற்படுமானால், வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களின்போது மட்டுமே கிடைக்கும் என்று கூறிய சுற்றுச்சூழல் செனேட்டரான Jens Kerstan, அறைகளை வெப்பப்படுத்தும் வெப்பத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, ஏற்கனவே ஜேர்மனி குளிர்காலத் தேவைக்காக எரிபொருட்களை சேகரிப்பதற்காக தன் குடிமக்களையும் நிறுவனங்களையும் எரிவாயு பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.