உள்ளாட்சி தேர்தலுக்கு அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த நபர்! காரணம் என்ன?
சிவகங்கையில் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க அரை நிர்வாணமாக வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளாமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 12வது வார்டுகான வாக்குப்பதிவு அப்பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் தலைவரான மகேஸ்குமார் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசரணையில், நான் நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். நகை மதிப்பீட்டாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தியே அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்தார். இதையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.