சுவிஸ் எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கிய நபர்: அவரிடம் இருந்த அந்த பொருள்...
சுவிஸ் எல்லை அதிகாரிகள், நாட்டுக்குள் யாராவது ஏதாவது போதைப்பொருட்கள் அல்லது அதிக அளவில் மதுபானம் போன்ற பொருட்களைக் கொண்டுவருகிறார்களா என்று பார்ப்பதுதான் வழக்கம்.
ஜேர்மனியிலிருந்து வந்தவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ஆனால், சமீபத்தில் உணவுப்பொருள் ஒன்றை ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் கொண்டுவந்த ஒரு 80 வயது முதியவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.
அவர் கொண்டு வந்த உணவுப் பொருள் காளான்!
உணவுப்பொருளுக்கும் கட்டுப்பாடு
சுவிட்சர்லாந்துக்குள் காளானைக் கொண்டுவருவது சட்டத்துக்கு உட்பட்டதுதான், ஆனாலும், அதற்கும் ஒரு அளவு இருக்கிறது.
இந்த முதியவர் ஜேர்மனியிலிருந்து மூன்று கிலோ அளவுக்கு காளான்களைக் கொண்டுவந்துள்ளார். அது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் என்பதால் பொலிசார் அவருக்கு அபராதம் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு காளானைத்தான் நாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் அந்த முதியவர்.
சுவிட்சர்லாந்துக்குள் வெளிநாட்டிலிருந்து ஒரு கிலோ காளானை மட்டுமே கொண்டு வர அனுமதியாம்!
image - Pixabay