படுக்கையில் சொகுசாக படுத்து கொண்டே 10 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதித்த பிரித்தானியர்!
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் காதலியின் வீட்டில் இருந்து கொண்டே 10 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதித்து பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் Johnny Boufarhat (27). இவர் 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். ஐடி ஊழியரான இவருக்கு அனைவரும் எப்போதுமே உபயோகப்படுத்தும் ஒரு செயலியை தானே உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் அதற்கான நேரம் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு இவருக்கு கைகொடுத்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் தனது காதலியின் வீட்டில் சிக்கிய Johnny, வீட்டின் படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்துள்ளார்.
அந்த ஆப்பிற்கு Hopin என பெயரிட்டு ரிலீஸ் செய்த நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை அந்த அப்பை சுமார் 50 லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக தற்போது Johnny இங்கிலாந்து நாட்டின் 113-வது பணக்காரராக மாறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் Johnny சில நாட்கள் முன்பு தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்று சுமார் 10 பில்லியன் வரை சம்பாதித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் காதலியின் வீட்டில் இருந்து கொண்டே Johnny கோடீஸ்வரராக மாற்றியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.