ஆன்லைனில் ஐபோனை ஆர்டர் செய்த பிரித்தானியருக்கு காத்திருந்த மிகப்பெரிய ஏமாற்றம்! இறுதியில் கிடைத்தது என்ன?
இங்கிலாந்தில் ஒருவர் 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ள நிலையில் அவருக்கு போனுக்கு பதிலாக சாக்லேட் கிடைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்தில் உள்ள Leeds நகரில் வசித்து வருபவர் Daniel Carroll. இவர் கடந்த 2ஆம் திகதி அன்று 1,045 பவுண்டு மதிப்புள்ள iPhone 13 Pro Max போனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
17ஆம் திகதி கிடைக்க வேண்டிய பார்சல் இரண்டு வாரங்கள் தாமதமாக்கப்பட்டு நேற்று தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்த போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் ஐபோனுக்கு பதிலாக இரண்டு Cadbury’s White Oreo சாக்லேட் பார்கள் இருந்தன. அவை வெள்ளை டாய்லெட் பேப்பரில் அழகாக அலங்கரிப்பட்டு இருந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட Daniel ட்விட்டர் பக்கத்தில் தனக்கு வந்த சாக்லேட்டை புகைப்படம் பிடித்து பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, முதலில் நான் பார்சலை பிரித்த போது பார்சலில் உள்ள டேப் சிதைக்கப்பட்டிருப்பதை கவனித்தேன்.
After a long weekend of a brand new iPhone 13 pro max being stuck in @DHLParcelUK network, failing any delivery attempt Friday -Sun.. finally picked up the parcel yesterday from DHL leeds to find the package tampered with and the new phone (Christmas present) replaced with this. pic.twitter.com/AmsLStbenA
— Daniel ✌ (@Daniel_James201) December 21, 2021
இதனால் சந்தேகம் ஏற்பட்டது. உடனே ஆர்டர் செய்த DHL நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கினேன். ஆனால் அவர்களிடம் இருந்து முரண்பட்ட கருத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக DHL நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் டேனியலுக்கு போனை திரும்ப வழங்குவதை உறுதி செய்ய அனுப்புநரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.