சட்ட விரோதமாக கனடா எல்லைக்குள் நுழைந்த நபர்... அவரை சோதித்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சட்ட விரோதமாக கனடா எல்லைக்குள் நுழைந்த ஒருவரை விரைந்து பிடித்த கனேடிய பொலிசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் திகதி, John Wright என்னும் அமெரிக்கர், கனடா எல்லைக்குள் நுழைந்துள்ளார். விரைவாக அவரைக் கைது செய்த கனேடிய பொலிசார் அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, குண்டுகள் நிரப்பப்பட்ட மூன்று துப்பாக்கிகள் மற்றும் stun gun ஒன்றும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கனடாவுக்கு வந்த கனேடிய பெண் ஒருவருடன், cab ஒன்றில் ஏறி கனடாவுக்குள் நுழைந்துள்ளார் Wright.
ஆயுதங்களுடன் நாட்டுக்குள் நுழைந்த ஒருவரை அடையாளம் கண்டு, விரைவாக அவரைக் கைது செய்ததால், கனேடியர்களை அச்சுறுத்தல் ஒன்றிலிருந்து காப்பாற்றியுள்ள கனேடிய பொலிசாரின் பணி பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார் Supt. Bert Ferreira என்னும் அதிகாரி.
கனடாவுக்குள் நுழைந்த அந்த நபரை, கைது செய்தது எப்படி என்பது குறித்த விவரங்களை வெளியிடாத பொலிசார், அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.