கெட்ட சகுனம்... பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி பயன்படுத்திய ஒரு பொருள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்
ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றதும், பிரதமர் இல்லம் முன்பு அவர் உரையாற்றியபோது அவர் பயன்படுத்திய ஒரு பொருளை கெட்ட சகுனம் என்கிறார்கள் சமூக ஊடக பயனர்கள் சிலர்.
வேறு சிலரோ, ரொம்ப தேவைதான் என்கிறார்கள்.
ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றதும், பிரதமர் இல்லம் முன்பு அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் பயன்படுத்திய ஒரு பொருளை கெட்ட சகுனம் என்கிறார்கள் சமூக ஊடக பயனர்கள் சிலர்.
Image: via REUTERS
அதாவது, ஒவ்வொரு பிரதமரும் பொறுப்பேற்றதும், அவர்கள் நின்று உரையாடும்போது, அவர்களுக்கு முன் ஒரு சிறு மேடை வைக்கப்பட்டிருக்கும். அது, lectern என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரதமரும் அதை தனக்கென புதிதாக வடிவமைத்துக்கொள்வார்களாம். ஆனால், ரிஷிக்காக புதிய lectern செய்யப்படவில்லையாம். ஏற்கனவே பிரதமர்களாக இருந்தவர்கள் பயன்படுத்திய lecternஐத்தான் ரிஷிக்குக் கொடுத்தார்களாம்.
Image: Pippa Fowles / No10 Downing Street
ஆகவே, முன்பு சரியாக நிர்வாகம் செய்யாமல் ராஜினாமா செய்தவர்கள் பயன்படுத்திய lecternஐ ரிஷி பயன்படுத்தியது கெட்ட சகுனம் என்கிறார் ஒருவர்.
இன்னொரு பக்கம், ஒவ்வொரு பிரதமர் பொறுப்பேற்கும்போதும் அவர்களுக்கு புதிதாக lectern உருவாக்கப்படும் என்பதை இப்போதுதான் முதன்முதலாக கேள்விப்பட்ட மக்கள் சிலர், என்னது, ஆளுக்கொரு புதிய மேடையா, இங்கே நாங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திணறிக்கொண்டிருக்கிறோம், எவ்வளவோ பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறோம். இவர்களுக்கு புது மேடை தேவைப்படுகிறதா என கரித்துக்கொட்டுகிறார்கள்!