கடைசி நேரத்தில் லொட்டரிச்சீட்டை மாற்றிய பிரித்தானிய பெண்ணுக்கு அடித்துள்ள மெகா அதிர்ஷ்டம்
பிரித்தானியப் பெண் ஒருவர் கடைசி நேரத்தில் லொட்டரிச்சீட்டை மாற்றியுள்ளார்.
அவருக்கு மாதம் ஒன்றிற்கு 10,000 பவுண்டுகள் வீதம் ஒரு ஆண்டுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
யார்க்ஷையரைச் சேர்ந்த சூசி (Suzy Fenton, 44), லொட்டரி வாங்கும் வழக்கம் கொண்டவர். அதேபோல் இந்த முறையும் சூசி லொட்டரிச்சீட்டு வாங்கிய நிலையில், வழக்கமாக வாங்கும் எண்களைத் தெர்ந்தெடுக்காமல், இம்முறை வித்தியாசமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
ஆகவே, கடைசி நேரத்தில், தான் வாங்க முடிவு செய்த சீட்டை மாற்றி, இம்முறை தன் மனதுக்குப் பிடித்த, பிறந்தநாளிலுள்ள எண்கள் கொண்ட லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார் சூசி.
Credit: PA
அவர் நினைத்ததுபோலவே அதிர்ஷ்டம் சூசியின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது.
அதுவும் சூசிக்கு பரிசாக ஒரே தொகை கிடைக்கவில்லை, மாதம்தோறும் அவருக்கு 10,000 பவுண்டுகள் ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து பரிசாக வழங்கப்பட உள்ளது.
Credit: PA
பெருந்தொகை பரிசாக கிடைத்தாலும், தான் இப்போது பார்க்கும் வேலையை விடும் எண்ணமெல்லாம் இல்லையாம் சூசிக்கு.
ஒன்று, தனது வீட்டுக்கான கடனை அடைக்கவேண்டும், இரண்டு, கனடா மற்றும் அமெரிக்காவிலிருக்கும் தனது இரண்டு தோழிகளையும் சென்று சந்திக்கவேண்டும் என்ற ஆசை தவிர வேறு ஆசை எதுவும் இல்லையாம் சூசிக்கு.
Credit: PA