மன்னர் சார்லசை முதன்முறை சந்தித்த பிரித்தானிய புதிய பிரதமர் செய்த குளறுபடி: கவனம் ஈர்த்ததோ வேறொருவர்
பிரித்தானியாவின் மன்னர் சார்லசை, பிரித்தானியாவின் பிரதமர் என்ற முறையில் முதன்முறையாக சந்தித்தார் லிஸ் ட்ரஸ்.
லிஸ் ட்ரஸ் மன்னரை சந்திக்கும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ள நிலையில், லிஸ் ட்ரஸ்ஸை கேலி செய்யும் கருத்துக்கள் பலவற்றை ட்விட்டர் பயனர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தில் மன்னர் அல்லது மகாராணியாரை சந்திக்கும்போது ஆண்கள் தலையை குனிவதன் மூலம் தங்கள் மரியாதையைக் காட்டுவார்கள். பெண்கள், தங்கள் முழங்கால்களை சற்றே மடக்கி தங்கள் மரியாதையைக் காண்பிப்பார்கள். அதை curtseyஎன்று அழைப்பார்கள்.
ஆனால், லிஸ் ட்ரஸ்ஸோ தலையையும் குனிந்ததுடன், curtsey முறையிலும் மரியாதை செலுத்த, ட்விட்டர் பயனர் ஒருவர் யாராவது இவருக்கு curtsey செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள் என்று கூற, மற்றொருவரோ, முதலில் பிரதமராக இருப்பது எப்படி என்று முதலில் அவருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், அது மன்னரை பிரதமர் சந்திக்கும் நிகழ்ச்சி என்றாலும், அது தொடர்பான காட்சிகளில் இடம்பெற்றுள்ள வேறொருவர் கவனம் ஈர்த்துள்ளார்.
NEW VIDEO: King Charles holds the first of his weekly audiences with Prime Minister Liz Truss.
— Chris Ship (@chrisshipitv) October 12, 2022
It happened today at Buckingham Palace pic.twitter.com/VibppWrT8C
அவர், மன்னரைக் காண லிஸ் ட்ரஸ்ஸை அழைத்துவந்த பாதுகாவலர். மன்னரைக் கண்டதும் முகம் மலர புன்னகையுடன் அவர் வணங்கும் காட்சி பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அவர்தான் இந்த சந்திப்பின் ஸ்டார் என்று ஒருவர் புகழ, யார் இந்த அழகான மனிதர். மன்னர் இருக்கும் இடத்திலெல்லாம் இவர் காணப்படுகிறாரே என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
? The King welcomes Prime Minister Liz Truss to Buckingham Palace for the first of their regular weekly audiences. pic.twitter.com/VJGXn46bge
— The Royal Family (@RoyalFamily) October 12, 2022
அவருக்கு பதிலளித்துள்ள ஒருவர், அவர் மேஜர் தாம்சன் என்றும், முன்பு அவர் மகாராணியாரின் மூத்த பாதுகாவலராக இருந்தார் என்றும், தற்போது மன்னரிடம் உதவியாளராக பணியாற்றுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, மன்னரை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே லிஸ் ட்ரஸ் சொதப்ப, அவரை விட்டுவிட்டு மக்கள் வேறொருவர் மீது கவனம் செலுத்துவதாக முடிந்துள்ளது அந்த சந்திப்பு.
image - twitter